செந்தில் பாலாஜி ஜாமின் மனு தாக்கல் செய்ய சென்னை செசன்சு கோர்ட்டு அனுமதி..!

செசன்சு கோர்ட்டு நீதிபதி அல்லி, மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார்.;

Update:2023-09-08 15:03 IST

சென்னை,

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் விசாரணை முடிந்து செந்தில் பாலாஜிக்கு எதிராக சுமார் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை மற்றும் ஆவணங்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ந்தேதி அமலாக்கத்துறையால் சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

பின்னர் இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

இதன் பின்னர், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை, சிறப்பு கோர்ட்டு விசாரிப்பதா? மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு விசாரிப்பதா? என்ற சட்ட சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் ஐகோர்ட்டில் விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் விசாரித்து, ஜாமின் மனு மட்டுமல்ல, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள வழக்கையும் மத்திய அரசு அறிவிக்கையின் அடிப்படையில் சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு தான் விசாரிக்க வேண்டும் என்று கடந்த வாரம் தீர்ப்பு அளித்தனர்.

இதையடுத்து, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில், செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமின் மனு தாக்கல் செய்ய இன்று காலையில் முறையிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி அல்லி, மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்