தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

அரசு ஊழியர் வீட்டில் திருடிய நகைக் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-06-09 19:03 GMT

விருத்தாசலம், 

விருத்தாசலம் வடக்கு பெரியார் நகர் யமுனை வீதியைச் சேர்ந்தவர் வடமலை மகன் சிவா(வயது 35). விருத்தாசலம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வரும் இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் முட்டம் கிராமத்தில் நடைபெற்ற கோவில் திருவிழாவுக்கு சென்றார். பின்னர் திருவிழா முடிந்து சிவா குடும்பத்துடன் அங்கிருந்து புறப்பட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது இரவு நேரத்தில் மர்மநபர்கள் அவரது வீட்டின் பின்புறம் வழியாக உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 18 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.7½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.

பின்னர் இது குறித்து சிவா கொடுத்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் தனிப்படை அமைத்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்