கார் மீது லாரி மோதி 4 பேர் படுகாயம்
பாகலூர் அருகே கார் மீது லாரி மோதி 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஓசூர்
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது23). சம்பவத்தன்று இவரும், ஓசூர் அருகே பாகலூரை சேர்ந்த நாகராஜ் (22), சிவராமன் (23) ஆகிய 3 பேரும் காரில் ஓசூரில் இருந்து பாகலூர் நோக்கி சென்றனர். காரை, பெலத்தூரை சேர்ந்த விஷ்ணு தேஜா (23) என்பவர் ஓட்டிச்சென்றார். வழியில், அந்த பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த லாரி கார் மீது மோதியது. இந்த விபத்தில் கார் டிரைவர் விஷ்ணு தேஜா உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.