மொபட் மீது ஆட்டோ மோதியது; கட்டிட மேஸ்திரி படுகாயம்

Update: 2023-07-13 19:30 GMT

பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 45), கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று மாரண்டஅள்ளியில் இருந்து பாலக்கோடு நோக்கி தனது மொபட்டில் வந்து கொண்டிருந்தார். பாலக்கோடு அருகே ஜன்னி கொட்டாய் பகுதியில் வந்த போது, பாலக்கோட்டில் இருந்து மாரண்டஅள்ளி நோக்கி வந்த ஆட்டோ கோவிந்தராஜின் மொபட் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த கோவிந்தராஜை அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவலறிந்த பாலக்கோடு போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்