செந்துறை பகுதியில் தொடர் திருட்டு

செந்துறை பகுதியில் தொடர் திருட்டு நடைபெற்று வருகிறது.

Update: 2022-10-10 18:45 GMT

செந்துறை பகுதியில் தொடர் திருட்டுஅரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள வீராக்கன் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற வலம்புரி ஆண்டவர் கோவில். நேற்று நள்ளிரவில் இந்த கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியலை உடைத்து தூக்கி சென்று அதிலிருந்த பணத்தை திருடி சென்று விட்டனர். இதேபோன்று கடந்த சில நாட்களாக பரணம், பிலாக்குறிச்சி, வீராக்கன் ஆகிய கிராமங்களில் தொடர்ந்து பலரது விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டு இருந்த மின்மோட்டார் வயர்களை வெட்டி திருடி சென்றுள்ளனர். இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ஆகவே உடனடியாக இது போன்று தொடர் திருட்டில் ஈடுபடும் திருடர்களை உடனே கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகளும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இரும்புலிக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்