தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு; குற்றவாளிகள் இன்று மாலைக்குள் கைது - டிஜிபி அதிரடி

பெட்ரோல் குண்டு வீச்சில் தொடர்புடைய குற்றவாளிகள் பெரும்பாலானோர் இன்று மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் என டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

Update: 2022-09-25 08:04 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பாஜக அலுவலகம் மற்றும் இந்து மத அமைப்புகளின் நிர்வாகிகளை குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

கோவை, சேலம், மதுரை, கன்னியாகுமரி உள்பட பல மாவட்டங்களில் பாஜக மற்றும் இந்து மத அமைப்பான ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்த சம்பவங்களால் மாநிலத்தில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கப்படுகிறது' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சில் தொடர்புடைய குற்றவாளிகள் பெரும்பாலானோர் இன்று மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் என தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையிலான போலீசார் சிறப்பாக செயல்படுகின்றனர் என்றார். உயர்மட்ட விசாரணை மேற்கொள்ளும் அளவு மோசமான சூழல் இல்லை என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்