தொடர் குற்ற சம்பவங்கள்
தொடர் குற்ற சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம் தொண்டப்பாடி ஊராட்சியில் அடிக்கடி இருசக்கர வாகன திருட்டு சம்பவம், சூதாட்டம், தற்போது இரட்டை கொலை சம்பவமும் நடந்துள்ளது. இது போன்ற கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்களை எளிதாக கண்டறிவதற்காக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் முக்கிய வீதிகள், கோவில் பகுதி, பொதுமக்கள் வந்து செல்லும் பொது இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.