சிப்பாய் எழுச்சி நாள்: கவர்னர் ஆர்.என்.ரவி நாளை வேலூர் வருகை
வேலூர் சிப்பாய் எழுச்சி நினைவு தூணில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
சென்னை,
ஆங்கிலேயர்களுக்கு எதிரான வேலூர் சிப்பாய் எழுச்சி தினம் ஜூலை 10-ந்தேதி கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் வேலூரில் நினைவு கூறும் வகையில் வேலூர் சிப்பாய் எழுச்சி நினைவு தூணில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
இதற்காக நாளை காலை 7 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து வேலூர் புறப்பட்டுச் சென்று காலை 10 மணிக்கு அஞ்சலி செலுத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் கவர்னருடன் தமிழக அமைச்சர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். வேலூரில் அன்றைய தினம் முன்னாள் படை வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் ஆகியோருடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடுகிறார்