வெவ்வேறு சம்பவம்: விபத்தில் 2 பேர் சாவு

கொட்டாம்பட்டி அருகே நடந்த சாலை விபத்துக்களில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2023-03-16 20:53 GMT

கொட்டாம்பட்டி,


கொட்டாம்பட்டி அருகே நடந்த சாலை விபத்துக்களில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

வேன் மோதியது

திருச்சி கீழகாசிபாளையம் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் விநாயகபெருமாள் (வயது 39). ஸ்ரீரங்கத்தை சேர்ந்த உறவினர் துர்கா(46). இவர்கள் 2 பேரும், கடந்த சனிக்கிழமை மதுரை பாண்டிகோவிலுக்கு சாமி கும்பிட மோட்டார் சைக்கிளில் சென்றனர். கொட்டாம்பட்டியை அடுத்துள்ள சூரப்பட்டி விலக்கு நான்கு வழிச்சாலையில் வரும்போது பின்னால் வந்த வேன் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

இருவரையும் மீட்டு சிங்கம்புணரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த துர்கா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்றொரு சம்பவம்

கொட்டாம்பட்டி அருகே உள்ள காடம்பட்டியை சேர்ந்தவர் ராமலிங்கம் (70). இவர் கடந்த 14-ந் தேதி சாப்பாடு வாங்க மோட்டார் சைக்கிளில் கருங்காலக்குடிக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். காடம்பட்டி விலக்கு அருகே நான்கு வழி சாலையில் வரும்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயங்களுடன் மீட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்