தியாகதுருகத்தில் ரூ.16 லட்சத்தில் சாலைகள் அமைக்கும் பணி
தியாகதுருகத்தில் ரூ.16 லட்சத்தில் சாலைகள் அமைக்கும் பணியை செந்தில்குமார் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்;
தியாகதுருகம்,
தியாகதுருகம் பேரூராட்சிக்கு உட்பட்ட புக்குளம் மற்றும் ஜே.ஜே நகர் ஆகிய பகுதிகளில் சாலைகள், நிழற்குடைகள் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாரிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் புக்குளம் அக்ரஹாரத் தெருவில் தார்ச்சாலை அமைக்க ரூ.10 லட்சம், அதே பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க ரூ.5 லட்சம், ஜே.ஜே. நகர் பகுதியில் சிமெண்டு சாலை அமைக்க ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.21 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார். இதையடுத்து இப்பணிகளின் தொடக்க நிகழ்ச்சி புக்குளத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு அ.தி.மு.க. நகர செயலாளர் ஷியாம் சுந்தர் தலைமை தாங்கினார். தியாகதுருகம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர அவை தலைவர் அய்யம்பெருமாள், துணை செயலாளர் கிருஷ்ணராஜ், ஜெயலலிதா பேரவை செயலாளர் வேல் நம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு கவுன்சிலர் ஜெகதீஸ்வரி கோவி முருகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு தார் சாலைகள், நிழற்குடை ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி வேலுமணி, மாவட்ட மாணவரணி இணை செயலாளர் சதாசிவம், எம்.ஜி.ஆர். மன்ற நகர செயலாளர் பழனிச்சாமி, முன்னாள் வார்டு கவுன்சிலர் அண்ணாமலை, நகர இளைஞரணி செயலாளர் ஏழுமலை, மகளிரணி தலைவி மாதேஸ்வரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இதயக்கண்ணன், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முனிராஜ், வார்டு செயலாளர் மணி, நிர்வாகிகள் பிரதாப் ராஜ், பொன்னுசாமி, சங்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி வேலுமணி நன்றி கூறினார்.