செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரின் வக்கீல் வருமானவரித் துறை முன் ஆஜர்- அதிகாரிகள் தகவல்

அசோக் குமாரின் வக்கீல் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து விட்டு சென்றுள்ளார் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-07-03 16:16 GMT

சென்னை,

கரூர் மாவட்டத்தில் கடந்த மே 26-ம் தேதி முதல் ஜூன் 2-ம் தேதி வரைக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீடு மற்றும் அலுவலகம் , அவரது நண்பர்கள், உறவினர்களின் வீடுகளில் அமலாக்கத் துறையினர் மற்றும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இதன் பின்னர் வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகம் அவரது , சகோதரர், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடத்தியதோடு பலரது அலுலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரிப்பதற்காக அமைச்சர் செந்தில் பாலாஜி, சகோதரர் அசோக் குமாருக்கு வருமான வரித்துறை 2 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் 2 முறையும் அவர் ஆஜராகவில்லை. தொடர்ந்து 3-வது முறையாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அசோக் குமாரின் வக்கீல் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து விட்டு சென்றுள்ளார் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 3-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டு அவர் ஆஜராகாத நிலையில், அவர் தரப்பில் வக்கீல் ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்