இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
செந்தில் பாலாஜி கவனித்துவந்த துறைகள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் தங்கம் தென்னரசு, மின்சாரத்துறையையும் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் கூடுதலாக கவனிக்க உள்ளனர்.
அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைதான நிலையில் அவர் வசமிருந்த துறைகள் இரு அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதனிடையே துறை இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர நிர்வாக ரீதியான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய பரிந்துரையை கவர்னர் ஏற்க மறுத்த நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.