செந்தில் பாலாஜி இலாகாக்கள் வேறு அமைச்சர்களுக்கு மாற்றம்
தமிழ்நாடு அமைச்சர்களின் இலாகா மாற்றங்கள் தொடர்பாக கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை,
தமிழ்நாடு அமைச்சர்களின் இலாகா மாற்றங்கள் தொடர்பாக கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த துறைகளை வேறு அமைச்சர்களுக்கு மாற்ற கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மின்சாரத்துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சர் முத்துசாமி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் துறைகள் பிறருக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.