செந்தில்பாலாஜி பதவி நீக்க விவகாரம் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை

கவர்னரின் முடிவு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்காக முதல் அமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

Update: 2023-06-30 03:11 GMT

சென்னை,

செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்குவதாக நேற்று இரவு கவர்னர் அலுவலகத்தில் இருந்து செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. கிடப்பில் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரத்தில் அட்டர்னி ஜெனரலின் ஆலோசனை பெற இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது தொடர்பாக, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கவர்னரின் முடிவு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்காக முதல் அமைச்சர் ஆலோசனை செய்கிறார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்ட வல்லுநர்கள்,மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோருடன் அவர் ஆலோசிக்கிறார். 

Tags:    

மேலும் செய்திகள்