செந்தில் பாலாஜி வழக்கை நடத்த அரசிடம் இருந்து அனுமதி கிடைக்கவில்லை - போலீஸ் தகவல்

குற்றப்பத்திரிக்கையில் சுமார் 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-01-03 12:25 GMT

சென்னை,

கடந்த 2011-15ம் ஆண்டு காலகட்டத்தில் தமிழகத்தின் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, பலரிடம் போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் கூடுதல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அந்த குற்றப்பத்திரிக்கையில் சுமார் 900 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், வழக்கை நடத்துவதற்கான அனுமதி தமிழக அரசிடம் இருந்து இன்னும் கிடைக்கவில்லை எனவும் காவல்துறை தரப்பு கோர்ட்டில் தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான நடைமுறைகளை தொடர அவகாசம் கோரப்பட்ட நிலையில், வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 2-ந்தேதிக்கு ஒத்திவைத்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.   

Tags:    

மேலும் செய்திகள்