சேந்தமங்கலம் அருகே சொத்து தகராறில் வாலிபர்களை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

சேந்தமங்கலம் அருகே சொத்து தகராறில் வாலிபர்களை தாக்கிய 5 பேர் மீது வழக்கு;

Update:2022-06-28 19:20 IST

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திகுளத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 76). இவரது உறவினர்கள் அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் செல்லமுத்து சொத்தில் உள்ள சில பகுதியை இருதரப்பை சேர்ந்த உறவினர்கள் கேட்டு தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 25-ந் தேதி துத்திகுளத்தை சேர்ந்த பட்டதாரியான கிருஷ்ணன் (22) மற்றும் அவரது உறவினர் தொழிலாளியான கார்த்தி (21) ஆகியோர் வீட்டில் இருந்தபோது அவர்களது உறவினர்களான முனியம்மா, அவரது கணவர் ராஜ்குமார், கோகுல், வடிவேல் மற்றும் ஒருவர் ஆகிய 5 பேர் வந்தனர்.

பின்னர் சொத்து பிரச்சினை தொடர்பாக கிருஷ்ணன் மற்றும் கார்த்தியை தாக்கினர். இதில் படுகாயமடைந்த இருவரும் சேந்தமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியம்மா உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்