வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை

வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை

Update: 2023-05-16 13:29 GMT

திருப்பூர்

உடுமலை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பள்ளி மாணவி

க்கு பாலியல் தொந்தரவு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொட்டையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 23). இவர் ஒர்க் ஷாப் ஊழியர். இவர் கடந்த 2020-ம் ஆண்டு குடிமங்கலத்தை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவியிடம் பழகி வந்துள்ளார். பின்னர் ஆசைவார்த்தை கூறி வெளியூர் அழைத்துச்சென்று அந்த மாணவியை சந்தோஷ்குமார் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதுகுறித்து உடுமலை மகளிர் போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

20 ஆண்டு கடுங்காவல் சிறை

அதன்படி பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்கு சந்தோஷ்குமாருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம், அபராதம் கட்டத்தவறினால் 1 ஆண்டு சிறை தண்டனையும், இந்த அபராத தொகை பாதிக்கப்பட்ட சிறுமியின் மறுவாழ்வுக்கு வழங்க வேண்டும். சிறுமியை வெளியூர் கடத்தி சென்ற குற்றத்துக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.2,500 அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும் இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி பாலு தீர்ப்பளித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்பட்டுள்ள உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகளுக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடாக வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட இழப்பீடு நிதியத்தில் இருந்தோ, அரசால் ஏற்படுத்தப்பட்ட மற்ற திட்ட நிதியில் இருந்தோ வழங்க வேண்டும். அவ்வாறு நிதி இல்லையென்றால் அரசு வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் ஜமீலா பானு ஆஜராகி வாதாடினார்.


Tags:    

மேலும் செய்திகள்