போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் சென்னியநல்லூர்-வடரங்கம் சாலை

கொள்ளிடம் அருகே போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் சென்னிய நல்லூர்- வடரங்கம் சாலை உள்ளதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

Update: 2023-01-28 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் சென்னிய நல்லூர்- வடரங்கம் சாலை உள்ளதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

தார்ச்சாலை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சென்னியநல்லூர் கிராமத்தில் இருந்து வடரங்கத்துக்கு தார்ச்சாலை செல்கிறது. இந்த தார்ச் சாலை கடந்த 10 ஆண்டுகளாக மேம்படுத்தப்படாமல் உள்ளது. இதன் காரணமாக சாலை நெடுகிலும் ஜல்லிகள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ளது.

இதனால் அங்கு உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள். அறுவடை செய்த நெல் மற்றும் இதர தானியங்களை இந்த சாலை வழியாக விவசாயிகள் கொள்ளிடம், சீர்காழி உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக எடுத்து செல்வது வழக்கம்.

சீரமைக்க வேண்டும்

இந்த நிலையில் சாலை மோசமாக இருப்பதால் விவசாயிகளால் விளை பொருட்களை விற்பனைக்கு எளிதாக எடுத்து செல்ல முடியவில்லை. இரவு நேரங்களில் இந்த சாலையில் வரும்போது விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே சென்னியநல்லூர் கிராமத்திலிருந்து வடரங்கம் செல்லும் சாலையை உடனடியாக சீரமைத்து மேம்படுத்த வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்