மூத்த குடிமக்கள் நலச்சங்க கூட்டம்
திருச்செ்தூரில் மூத்த குடிமக்கள் நலச்சங்க கூட்டம் நடந்தது.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரில் நகர மூத்த குடிமக்கள் நலச்சங்க மாதாந்திர கூட்டம் நடந்தது. சங்க தலைவர் முத்தையாராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் கந்தப்பன் வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினராக இந்திய ஹோமியோபதி மருத்துவ சங்க மாவட்ட தலைவர் டாக்டர் முத்துக்குமரன் கலந்து கொண்டு 'ஹோமியோபதியும், வயோதிகமும்' என்ற தலைப்பில் பேசினார். பின்னர் சங்க முன்னாள் தலைவர் ஆனந்த் வி.ராயன், துணை தலைவர் முருகன் ஆகியோர் ஹோமியோபதி மருத்துவத்தில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதில் சங்க உறுப்பினர்கள் 70 பேர் கலந்து கொண்டனர். முடிவில், சங்க துணை செயலாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.