செங்கோட்டை-தாம்பரம் ரெயில் வாரம் மும்முறை இயக்கம்

செங்கோட்டையில் இருந்து நெல்லை வழியாக தாம்பரத்துக்கு இயக்கப்படும் வாராந்திர அதிவிரைவு ரெயில், வருகிற 1-ந்தேதி முதல் வாரம் மும்முறை இயக்கப்படுகிறது.

Update: 2023-05-27 18:45 GMT

செங்கோட்டை-தாம்பரம் இடையே நெல்லை வழியாக வாராந்திர அதிவிரைவு ரெயிலை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அந்த ரெயில் தற்போது தாம்பரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமையும், செங்கோட்டையில் இருந்து திங்கட்கிழமையும் புறப்பட்டு செல்கிறது. இந்த ரெயில் வருகிற ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி வருகிற 1-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் இந்த ரெயில் வாரத்தில் 3 நாட்கள் இயக்கப்படுகிறது.

அதன்படி தாம்பரத்தில் இருந்து ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.50 மணிக்கு நெல்லைக்கு வந்து, 8.55 மணிக்கு இங்கிருந்து புறப்படுகிறது. இந்த ரெயில் சேரன்மாதேவிக்கு 9.12 மணி, அம்பைக்கு 9.26 மணி, பாவூர்சத்திரத்துக்கு 9.47 மணி, தென்காசிக்கு 10.07 மணி, செங்கோட்டைக்கு 10.50 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் செங்கோட்டையில் இருந்து திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு புறப்படுகிறது. இந்த ரெயில் தென்காசிக்கு 4.26 மணி, பாவூர்சத்திரத்துக்கு 4.38 மணி, அம்பைக்கு 4.55 மணி, சேரன்மாதேவிக்கு 5.09 மணி, நெல்லைக்கு 5.30 மணிக்கு வந்து செல்கிறது. மறுநாள் காலை 6.05 மணிக்கு தாம்பரத்தை சென்றடைகிறது.

இந்த ரெயில் விருதுநகர், அருப்புக்கோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, திருப்பாதிரிபுலியூர் (கடலூர்), விழுப்புரம் வழியாக செல்கிறது. இதற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்