பாடகர் டி.எம் கிருஷ்ணாவுக்கு எம்.எஸ் சுப்புலட்சுமி பெயரில் விருது - சென்னை ஐகோர்ட்டு தடை

சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2024-11-19 07:39 GMT

சென்னை,

இசைக்கலைஞர் டி.எம் கிருஷ்ணா சமூக கருத்துக்களையும், மத நல்லிணக்கத்தையும் வலியுறுத்தி கர்நாடக இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இதையொட்டி, சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டார்.

இந்த சூழலில், மறைந்த கர்நாடக இசை பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் 'எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு எதிராக அவதூறான கருத்துகளை டி.எம். கிருஷ்ணா கூறி வருவதால், சங்கீத கலாநிதி விருதினை, எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரில் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்கக் கூடாது' என்று சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ் சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க தடைவிதித்து மியூசிக் அகாடமிக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரை பயன்படுத்தாமல் விருது வழங்கலாம் என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்