செம்மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

செம்மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2023-04-11 20:26 GMT

உப்பிலியபுரம் பகுதியில் டிப்பர் லாரிகள் மூலம் செம்மண் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் துறையூர் தாசில்தார் புஷ்பராணி, வருவாய் அலுவலர்களுடன் கண்காணிப்பில் ஈடுபட்டார். அப்போது மாராடி-கோட்டப்பாளையம் இடையேயான சாலையில் 2 டிப்பர் லாரிகள் செம்மண் ஏற்றிக்கொண்டு வேகமான வந்தன. அந்த லாரிகளை நிறுத்தி சோதனை செய்தபோது, டிரைவர்கள் 2 பேரும் இறங்கி தப்பியோடி விட்டனர். இதையடுத்து லாரிகளை பறிமுதல் செய்த வருவாய் துறையினர், அவற்றை உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சோபனபுரத்தை சேர்ந்த ராஜா மற்றும் கோட்டப்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் 2 டிப்பர் லாரிகளில் 6 யூனிட் செம்மண் கடத்தியது தெரியவந்தது. இது குறித்து உப்பிலியபுரம் வருவாய் ஆய்வாளர் கீதா அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செபாஸ்டின்சந்தியாகு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்