நலிவுற்றோர் நலன் குறித்த கருத்தரங்கம்

நலிவுற்றோர் நலன் குறித்த கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டார்.

Update: 2022-05-31 19:06 GMT

சிம்லா- இமாச்சல் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நலிவுற்றோர் நலன் குறித்த கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித்திட்டத்தின் கீழ் 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பிற பயனாளிகளுக்கு ரூ.21 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதி மின்னணு முறையில் ஏற்றப்பட்ட நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட பயனாளிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரபுசங்கர் மற்றும் கரூர் மாவட்ட பயனாளிகள் பார்வையிட்டனர். இந்தநிகழ்ச்சியில் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா (கிராமீன் - நகர்ப்புற இரண்டும்), பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா, போஷன் அபியான், பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா, ஸ்வச் பாரத் மிஷன் (கிராமீன் - நகர்ப்புறம் ஆகிய இரண்டும்), ஜல் ஜீவன் மிஷன் பிரதான் மந்திரி ஸ்வநிதி திட்டம், ஒரே நாடு ஒரு ரேஷன் கார்டு, பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா, ஆயுஷ்மான் பாரத் பி.எம். ஜன் ஆரோக்கிய யோஜனா, ஆயுஷ்மான் பாரத் உடல்நலம் மற்றும் ஆரோக்கிய மையம், பிரதான் மந்திரி முத்ரா யோஜனா ஆகிய திட்டங்களின் கீழ் பிரதமர் தலா 15 பயனாளிகளுக்கான பண பயன்களை அளித்தார். அந்த வகையில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறுத்துறை சார்ந்த திட்டங்கள் மூலம் 200-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்