சிறுதானியங்கள் பயன்பாடு குறித்த கருத்தரங்கு

சிறுதானியங்கள் பயன்பாடு குறித்த கருத்தரங்கு

Update: 2023-02-22 18:45 GMT

ஊட்டி

மத்திய அரசின் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் யுவகேந்திரா என்ற தன்னாட்சி அமைப்பு செயல்படுகிறது. இதன் மூலம் நீலகிரி மாவட்ட அளவிலான இளையோர் நாடாளுமன்றம், சிறுதானியங்கள் பயன்பாடு ஆகிய கருப்பொருளை உள்ளடக்கிய ஒருநாள் கருத்தரங்கம், ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்தவர்களை அரசு கலைக்கல்லூரி நுண்கலை மன்ற ஒருங்கிணைப்பாளர் ஷோபனா வரவேற்றார். இதற்கு இயற்பியல் துறை தலைவர் முருகன் தலைமை தாங்கினார். தாவரவியல் துறையை ேசர்ந்த பேராசிரியர் ராஜேஷ் குமார், சர்வதேச சிறுதானிய ஆண்டு என்ற தலைப்பிலும், வரலாற்றுத்துறை தலைவர் கனகாம்பாள் ஆரோக்கியமான வாழ்வியல் என்ற தலைப்பிலும், வணிகவியல் துறை விரிவுரையாளர் ராமமூர்த்தி ஜி-20 என்ற தலைப்பிலும் விரிவாக பேசினார்கள். இதில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளும் இயற்கை வாழ்வியலை கருப்பொருளாக கொண்டு பாடல் பாடியும், நடனம் ஆடியும், கவிதை வாசித்தும் அசத்தினர். தொடர்ந்து சிறப்பாக பங்களிப்பாற்றிய மாணவ-மாணவிகளுக்கு யுவகேந்திரா நிர்வாகி அருண்குமார் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை ஊட்டி அரசு கலைக்கல்லூரி நுண்கலை மன்றக்குழுவினர் செய்திருந்தனர். இதேபோன்று நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த சிறு தானிய வகைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Tags:    

மேலும் செய்திகள்