இறால் வளர்ப்பு குறித்த கருத்தரங்கம்
இறால் வளர்ப்பு குறித்த கருத்தரங்கம்;
தலைஞாயிறு மீன்வளப்பல்கலைக்கழகத்தில் இறால் வளர்ப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வர் பாலசுந்தரி தலைமை தாங்கினார்.
இதில் சீர்காழி ராஜீவ்காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மைய இயக்குனர் கந்தன் கலந்துகொண்டு இறால் வளர்ப்பில் முறையான மேலாண்மை பற்றி எடுத்துரைத்தார். கருத்தரங்கில் கடலோர நீர் வாழ் உயிரின வளர்ப்பு தொழில்நுட்ப இயக்குனர் அந்தோணி சேவியர், சுரேஷ் தொழில்நுட்ப உதவி மேலாளர் குமரவேல், பண்ணை பொது மேலாளர் கோவிந்தராஜ் மற்றும் விஞ்ஞானிகள், கல்லூரி பேரசிரியர்கள், பல்கலைக்கழக மாணவ-மாணவிகள், இறால் வளர்ப்போர் கலந்து கொண்டனர்.