மருத்துவ திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம்
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவம் சார்ந்த திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மருத்துவம் சார்ந்த திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி பேசினார். கூட்டத்தில் தமிழக அரசின் மருத்துவ திட்டங்கள், அவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி டீன் மீனாட்சிசுந்தரம், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பரிமளம், குடும்ப நலத்துறை துணை இயக்குனர் அன்புசெழியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.