வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம்

வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2023-10-24 18:45 GMT

கழுகுமலை:

கழுகுமலை அருகே உள்ள வளனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்த்துக் கொள்வதால் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் காசிராஜன் தலைமை தாங்கினார். கல்லூரி செயலர் அருட்தந்தை ஜோசப் கென்னடி முன்னிலை வகித்தார். பேராசிரியர் பால்ராஜ் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கர்நாடகாவை சேர்ந்த பேராசிரியர் ரதீஷ்மடிவால் கலந்து கொண்டு பேசினார். மகேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் பிரபாகரன், பாலமுருகன், மணிகண்டன் மற்றும் மாணவ, மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் அய்யனக்குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்