திருச்செந்தூர்கோவிந்தம்மாள்ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கருத்தரங்கு

திருச்செந்தூர்கோவிந்தம்மாள்ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் கருத்தரங்கு நடைபெற்றது.

Update: 2022-11-17 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் தமிழ் துறை, அகத்தியர் முத்தமிழ் மன்றம் சார்பில், பிளஸ்-2 மாணவிகளுக்கு பழங்கால புழங்கு பொருட்கள் குறித்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கி, கண்காட்சியை தொடங்கி வைத்தார். தமிழ் துறைத்தலைவர் ஜான்சிராணி வரவேற்று பேசினார். திருச்செந்தூர் வாசியோகம் மற்றும் ராஜயோகப் பயிற்சியாளர் சண்முக ஆனந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 'பழங்கால புழங்கு பொருட்களும் அதன் பயன்பாடுகளும்' என்ற தலைப்பில் பேசினார். நவீனகால மாற்றத்தால் மறுக்கப்பட்ட மற்றும் மறைக்கப்பட்ட வீட்டு உபயோக பொருட்களின் தேவைகள், அவற்றின் பயன்பாடுகள் குறித்து விளக்கி கூறினார்.

கல், மண், மரம், பனைமர பொருட்கள், இரும்பு, பித்தளை, வெண்பித்தளை, வெண்கலம், செம்பு, வெள்ளி, தங்கம் போன்றவற்றால் செய்யப்பட்ட 200-க்கும் மேற்பட்ட பழங்கால புழங்கு பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டு இருந்தது. இவற்றை ஆறுமுகநேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளும், கல்லூரி மாணவிகளும் பார்வையிட்டு பயனடைந்தனர். அகத்தியர் முத்தமிழ் மன்ற செயலாளர் ஸ்ரீமதி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை மன்ற மாணவ துணை செயலாளர் ரோசாரி அனிஷா தொகுத்து வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்