மங்கலக்குடியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

மங்கலக்குடி ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த துப்புரவு பணி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2023-05-02 18:45 GMT

தொண்டி, 

திருவாடானை யூனியன் மங்கலக்குடி ஊராட்சியில் நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த துப்புரவு பணி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் அப்துல் ஹக்கீம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பொதுமக்கள், தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் இணைந்து மங்கலக்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் துப்புரவு பணி மேற்கொண்டனர்.

தொடர்ந்து விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அனைவரும் நம்ம ஊரு சூப்பரு திட்டம் தொடர்பான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் தூய்மை பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஊராட்சி செயலாளர் ரகு வீர கணபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.. பேரணி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நிறைவடைந்தது. இதில் அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் கவுதம், ஊராட்சி செயலாளர் பழனிக்குமார், வட்டார ஒருங்கிணைப்பாளர் கலா, திட்ட ஒருங்கிணைப்பாளர் பூபதி, தூய்மை காவலர்கள் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், துப்புரவு பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்