தொழில்நெறி வழிகாட்டு கருத்தரங்கம்

பர்கூர் அரசு மகளிர் கலை கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கம் நடந்தது.

Update: 2023-01-31 18:45 GMT

பர்கூர்

பர்கூர் அரசு மகளிர் கலை கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கம் நடந்தது.

கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், பர்கூர் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி, கருத்தரங்கம் நடந்தது. இதற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் தலைமை தாங்கி வேலை வாய்ப்பு குறித்த கையேட்டை வெளியிட்டார். வணிகவியல் துறை உதவி பேராசிரியர் ரேணுகா வரவேற்றார். கல்லூரி முதல்வர் பிரமிளா முன்னிலை வகித்தார். இதில் போட்டி தேர்வுகளுக்கான புத்தக கண்காட்சியை, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன் திறந்து வைத்தார்.

கருத்தரங்கில், வாழ்க்கை வெற்றி பெறுவதற்கே என்னும் தலைப்பில் நிமலன் மரகதவேல், சுயவேலைவாய்ப்பு திட்டங்கள் குறித்து மாவட்ட தொழில் மைய பொது மேலாளரும், போட்டித்தேர்வுகள் குறித்து தனியார் ஐ.ஏ.எஸ். அகாடமி நிறுவனர் தென்காசி ஆகாசமூர்த்தி ஆகியோர் பேசினர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை மாணவிகள் பார்வையிட்டனர்.

போட்டித்தேர்வுகள்

கருத்தரங்கில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் பேசுகையில், மாணவிகள் வாழ்க்கையில் வெற்றி பெற தன்னம்பிக்கை முக்கியம். போட்டி தேர்வுகளில் வெற்றியை தீர்மானிக்க தொடர் முயற்சி இருந்தால் வெற்றி நிச்சயம். அரசு வேலை என படிப்பவர்கள், சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணத்துடன் படிக்க வேண்டும். கல்லூரி மாணவிகள் படிக்கும் போதே, போட்டித்தேர்வுகளை எதிர் கொள்ள தங்களை தயார் செய்துக் கொள்ளுங்கள். மாணவிகள் தொய்வின்றி, தயக்கமின்றி தேர்வுகளையும், எதிர்காலத்தை எதிர்நோக்க கற்று கொள்ளுங்கள் என்று பேசினார். முடிவில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சுந்தரம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்