மாணவர்களுக்கான கருத்தரங்கு

மாணவர்களுக்கான கருத்தரங்கு நடந்தது.

Update: 2022-11-20 18:45 GMT

காரைக்குடி, 

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக திறன் மேம்பாட்டு நிறுவன தொழில் முனைவோர் புத்தாக்கம் மற்றும் தொழில் முனையம், அரசின் தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் புத்தாக்க நிறுவனம், அழகப்பா பல்கலைக்கழக நிறும செயலரியல் துறை இணைந்து பல்கலைக்கழக இறுதியாண்டு பயிலும் மாணவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கினை நடத்தியது. பல்கலைக்கழக திறன் மேம்பாட்டு நிறுவன இயக்குனர் பேதிராஜன் வரவேற்றார். அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி தலைமை தாங்கி பேசினார். இந்திய அரசின் பணியாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சக துணை இயக்குனர் சுப்புராஜ் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட தொழில் மைய தலைமை மேலாளர் கண்ணன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதன்மை மேலாளர் இளவழகன், அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் ராஜ மோகன், மேலாண்மை துறை தலைவர் பேராசிரியை அலமேலு ஆகியோர் தொழில்களுக்கான முன்மாதிரி திட்ட அறிக்கை குறித்து பேசினர். முடிவில் தொழில் முனைய தலைமை பயிற்றுனர் அருமை ரூபன் நன்றி கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்