செல்வமுத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

தென்பசியார் செல்வமுத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2022-06-10 14:55 GMT

திண்டிவனம்:

திண்டிவனம் அடுத்த தென்பசியார் கிராமத்தில் செல்வமுத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மண்டபம், விநாயகர், முருகன் ஆகிய பரிவார மூர்த்திகளை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்றது. புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும் இந்த கோவில் கும்பாபிஷேக விழா நேற்று  காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து யாகசாலையில் பல்வேறு ஹோமங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று காலை 7 மணிக்கு 2-ம் கால பூஜை, கோ பூஜை, மகா தீபாராதனை நடந்தது. பின்னர் புனித நீர் அடங்கிய கலசங்கள் மேள தாளங்கள் முழங்க கோவில் மேல்புறத்தில் உள்ள கோபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் காலை 9.50 மணிக்கு மந்திரங்கள் ஓதி கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவில் தலித் முன்னேற்றகழக மாநில தலைவர் வக்கீல் அன்பின்பொய்யாமொழி, திண்டிவனம் நகராட்சி 24-வது வார்டு கவுன்சிலர் வக்கீல் ராம்குமார், தென்பசியார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கதிர்வேல், மரக்காணம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் கஜெலட்சுமிராம்குமார் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தென்பசியார் கிராமமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்