6 உழவர் சந்தைகளில் ரூ.16¾ லட்சத்துக்கு காய்கறி விற்பனை

6 உழவர் சந்தைகளில் ரூ.16¾ லட்சத்துக்கு காய்கறி விற்பனை

Update: 2023-08-03 20:44 GMT

ஈரோடு சம்பத் நகர், பெரியார் நகர், பெருந்துறை, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், தாளவாடி ஆகிய 6 இடங்களில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. ஆடிப்பெருக்கு விழாவையொட்டி நேற்று உழவர் சந்தைகளில் அதிகமான காய்கறி விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. காய்கறியை வாங்குவதற்காக பொதுமக்களும் ஏராளமானவர்கள் குவிந்தனர்.

சம்பத் நகர் உழவர் சந்தைக்கு 17¼ டன் காய்கறி ரூ.6 லட்சத்து 7 ஆயிரத்து 238-க்கு விற்பனையானது. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள 6 உழவர் சந்தைகளிலும் மொத்தம் 52½ டன் காய்கறி ரூ.16 லட்சத்து 86 ஆயிரத்து 908-க்கு விற்பனையானதாக உழவர் சந்தை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்