ரூ.8 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை

நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 26¾ டன் காய்கறி மற்றும் பழங்கள் சுமார் ரூ.8 லட்சத்துக்கு விற்பனையானது.;

Update: 2023-02-26 18:45 GMT

உழவர்சந்தை

நாமக்கல் - கோட்டை சாலையில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளைவிக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்து வருகின்றனர். வார இறுதி நாட்களில் இங்கு காய்கறி விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்.

அந்த வகையில் நேற்று 22¾ டன் காய்கறிகள் மற்றும் 4 டன் பழங்கள் என மொத்தம் 26¾ டன் விற்பனைக்கு வந்தன. இவை ரூ.8 லட்சத்து 12 ஆயிரத்து 360 -க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 5,320 பேர் வாங்கி சென்றனர்.

விலை விவரம்

நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.27-க்கும், கத்தரிக்காய் கிலோ ரூ.52-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.48-க்கும், புடலங்காய் கிலோ ரூ.32-க்கும், பீர்க்கன் கிலோ ரூ.54-க்கும், பீட்ரூட் கிலோ ரூ.36-க்கும், கேரட் கிலோ ரூ.32-க்கும், பீன்ஸ் கிலோ ரூ.40-க்கும், முட்டைக்கோஸ் கிலோ ரூ.18-க்கும், இஞ்சி கிலோ ரூ.90-க்கும் விற்பனை செய்யப்பட்டன. சின்னவெங்காயம் கிலோ ரூ.40-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

கடந்த வாரத்தை ஒப்பிடும்போது காய்கறிகளின் வரத்து குறைந்தும், அவற்றின் விலை சற்று அதிகரித்தும் காணப்பட்டதாக உழவர்சந்தை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரம் கிலோ ரூ.48-க்கு விற்பனை செய்யப்பட்ட கத்தரிக்காய் நேற்று கிலோவுக்கு ரூ.4 அதிகரித்து கிலோ ரூ.52-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்