டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனையா?

கிணத்துக்கடவில் டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனையா? என மருந்து கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

Update: 2023-05-10 23:15 GMT

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவில் டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் விற்பனையா? என மருந்து கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

வலி நிவாரண மருந்துகள்

கிணத்துக்கடவு பகுதியில் உள்ள மருந்து கடைகளில் வலி நிவாரண மருந்துகள் டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனை செய்யப்படுவதாக கோவை மாவட்ட மருந்து கட்டுப்பாட்டுத்துறை இயக்குனர் குரு பாரதிக்கு புகார் வந்தது. அதன் பேரில் கிணத்துக்கடவு பகுதிகளில் உள்ள மருந்து கடைகளில் சோதனை நடத்த உத்தரவிட்டார்.

அதன்படி மருந்துகள் ஆய்வாளர் என்.ராஜேஷ்குமார், கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி ஆகியோர் கிணத்துக்கடவு பகுதியில் கோவை-பொள்ளாச்சி மெயின் ரோடு, ஆர்.எஸ்.ரோடு, பழைய சோதனை சாவடி உள்ளிட்ட இடங்களில் உள்ள 10 மருந்து கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். பின்னர் மருந்து கடைகளில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வலி நிவாரண மருந்துகள் மற்றும் தூக்க மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

கடும் நடவடிக்கை

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

மருந்து கடைகளில் வலி நிவாரண மருந்துகள் மற்றும் தூக்க மாத்திரைகள் டாக்டர் பரிந்துரை சீட்டு இல்லாமல் வழங்கப்படுவதாக புகார் வந்ததை தொடர்ந்து கிணத்துக்கடவில் உள்ள 10 மருந்து கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் மாத்திரை மருந்துகள் டாக்டர் பரிந்துரை சீட்டுடன் வழங்கப்பட்டது தெரியவந்தது.

கல்லூரி மாணவர்கள், இதர நபர்களுக்கு போதை தரும் வலி நிவாரண மருந்துகள் வழங்கக்கூடாது என அனைத்து மருந்து கடைக்காரர்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டு எள்ளது. தவறும் பட்சத்தில் மருந்து கடை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. தொடர்ந்து இதேபோல் சோதனை நடத்தி கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

மேலும் செய்திகள்