ரூ.12¾ லட்சத்துக்கு பருத்தி விற்பனை

கள்ளக்குறிச்சி வாரச்சந்தையில் ரூ.12¾ லட்சத்துக்கு பருத்தி விற்பனை செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-02-01 18:45 GMT

கள்ளக்குறிச்சி நேபால் தெருவில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் புதன்கிழமை அன்று பருத்தி சந்தை நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று பருத்தி சந்தை நடைபெற்றது. இங்கு கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கல்வராயன்மலை, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, தியாகதுருகம், விழுப்புரம், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 145 விவசாயிகள் மொத்தம் 560 பருத்தி மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். பருத்தியை திருப்பூர், விழுப்புரம், பண்ருட்டி, கும்பகோணம், சங்ககிரி, ஆத்தூர், கொங்கணாபுரம், புஞ்சைபுளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கினர். இதில் எல்.ஆர்.ஏ.ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.8,567-க்கும், குறைந்த பட்சமாக ரூ.7,189-க்கும், கொட்டு ரக பருத்தி ஒரு குவிண்டால் அதிகபட்சமாக 6,219-க்கும், குறைந்தபட்சமாக ரூ.3,299-க்கும் விற்பனையானது. இதன் மூலம் மொத்தம் ரூ.12 லட்சத்து 75 ஆயிரத்துக்கு பருத்தி விற்பனையானது. இந்த தகவலை கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் நிர்மல் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்