ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் சுய தொழில் வங்கி கடன் மானியம்

ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் சுய தொழில் வங்கி கடன் மானியம்;

Update: 2023-04-17 18:45 GMT

குறைதீர்க்கும் கூட்டத்தில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 78ஆயிரம் சுய தொழில் வங்கி கடன் மானியத்தை கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளித்து தீர்வு பெற்று வருகின்றனர். அதன்படி நேற்று திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் சாருஸ்ரீ தலைமை தாங்கினார்.

163 மனுக்கள்

கூட்டத்தில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்ைட, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விகடன், வீட்டுமனைபட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 163 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்தனர். அதனை பெற்று கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

சுய தொழில் வங்கி கடன் மானியம்

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில் வங்கி கடன் மானியம் ரூ.1 லட்சத்து 78 ஆயிரத்து 334, காதொலி கருவி கேட்டு மனுகொடுத்தவர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 780 மதிப்பில் காதொலி கருவியை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், தனிதுணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) லதா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்