அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி

நீடாமங்கலம் அரசு பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி நடந்தது.

Update: 2023-02-14 18:45 GMT

நீடாமங்கலம்:

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் தென்காரவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பள்ளி கல்வித்துறை சார்பில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நீடாமங்கலம் வட்டார கல்வி அலுவலர் சம்பத் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் முத்தமிழன், வளமைய மேற்பார்வையாளர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் தர்மராஜ் வரவேற்றார். இதில் தற்காப்பு பயிற்றுனர் குருபிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பட்டதாரி ஆசிரியர் அன்பழகன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்