திறன்மேம்பாட்டு பயிற்சிக்கு இளைஞர்கள் தேர்வு

திருக்கோவிலூர் அரசு பள்ளியில் திறன்மேம்பாட்டு பயிற்சிக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

Update: 2022-09-24 18:56 GMT

திருக்கோவிலூர், 

தமிழக அரசின் ஊரக மற்றும் நகரபுர வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் மேம்பாடு நிறுவனத்தின் சார்பில் படித்த இளைஞர்கள், இளம்பெண்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு இளைஞர்கள், இளம்பெண்களை தேர்வு செய்யும் முகாம் திருக்கோவிலூர் கபிலர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருக்கோவிலூர் நகரமன்ற தலைவர் டி.என். முருகன் கலந்து கொண்டு முகாமில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் வக்கீல் மு.தங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஏகாம்பரம், தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சக்திவேல், மாவட்ட தொழில் மையம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் நெறி மையம், மாவட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி மையம், தொழில் பயிற்சி நிலைய அலுவலர்கள் வாழ்த்துரை வழங்கினர். முகாமில் 150 பேருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் உள்ளாட்சி அமைப்புகள், பயிற்சி நிறுவனத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார மேலாளர் பிராபகர், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் சத்யா, சுதா, ராஜகுமாரி, தமிழ்செல்வி, சின்னப்பாப்பா, மருதுபாண்டியன், தமிழரசி, சமுதாய ஒருங்கிணைப்பாளர் மாலதி மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். முடிவில் கள்ளக்குறிச்சி மாவட்ட உதவித்திட்ட அலுவலர் எம்.ராஜா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்