புதிய போலீஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு

மேல்மலையனூரில் புதிய போலீஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-12-03 18:45 GMT

மேல்மலையனூர்:

மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், அமாவாசை நாளில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கிறார்கள். பக்தர்களை கண்காணிக்கும் வகையிலும், குற்றச்செயலை தடுக்கும் வகையிலும் கோவில் அருகிலேயே புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இங்கு புதிய போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்ற அவர், மேல்மலையனூரில் புதிய போலீஸ் நிலையம் அமைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கோவில் அருகிலேயே புதிய போலீஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை கலெக்டர் மோகன் நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது கூடுதல் கலெக்டர் சித்ராவிஜயன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா, தாசில்தார் அலெக்சாண்டர், வட்டார கல்விக்குழு தலைவர் நெடுஞ்செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர் சிலம்புச்செல்வன் மற்றும் துறை அலுவர்கள் உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து மேல்மலையனூரில் ஏழை, எளியவர்கள் மற்றும் வீடுகள் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவது குறித்து கலெக்டர் மோகன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

Tags:    

மேலும் செய்திகள்