ரூ.20 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு இடம் தேர்வு; எம்.எல்.ஏ. பாா்வையிட்டார்
கடையம் அருகே ரூ.20 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. அதனை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பாா்வையிட்டார்.
கடையம்:
கடையம் அருகே வெய்க்காலிப்பட்டி அருந்ததியர் காலணியில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிதாக சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கினார்.
இந்த நிலையில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கான இடத்தை நேற்று மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. தேர்வு செய்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் கடையம் பெரும்பத்து பஞ்சாயத்து தலைவர் பொன்ஷீலா பரமசிவன் வரவேற்றார். இதில் மாநில அமைப்புச் செயலாளர் ராதா, மாவட்ட செயலாளர் கணபதி மற்றும் நிர்வாகிகள், அருந்ததியர் சமுதாய ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.