பள்ளி மாணவன் வெளிநாடு கல்வி சுற்றுலாவிற்கு தேர்வு
திருமுல்லைவாசல் பள்ளி மாணவன் வெளிநாடு கல்வி சுற்றுலாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்;
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் பயிலும் ஒன்பதாவது வகுப்பு மாணவன் அசரப் அலி என்பவர் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான மெய்யறிவு வினாடி-வினா போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற இவர் தமிழக அரசு சார்பாக வெளிநாட்டு கல்வி சுற்றுலா செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெற்றி பெற்ற பள்ளி மாணவன் அசரப் அலியை பள்ளி தலைமையாசிரியர் தமிழரசி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.