மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு நடைபெற்றது.

Update: 2023-05-13 18:45 GMT

தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் சங்கம் சார்பில் கடலுர் மாவட்ட பெண்கள் கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வு, கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கி கிரிக்கெட் அணிக்கு வீராங்கனைகள் தேர்வை தொடங்கி வைத்தார். செயலாளர் கூத்தரசன் முன்னிலை வகித்தார். இந்த போட்டியில் 13 முதல் 24 வயதுக்குள் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த 30-க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதையடுத்து மாவட்ட அணிக்கு 16 சிறந்த வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் கடலூர் மாவட்ட அணி சார்பில் கிரிக்கெட் போட்டியில் விளையாட உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்