ஆக்கி வீரர்கள் தேர்வு

நெல்லை மாவட்ட ஆக்கி வீரர்கள் தேர்வு நடைபெற்றது.

Update: 2022-12-10 19:40 GMT

நெல்லை மாவட்ட அளவிலான ஆக்கி வீரர்கள் தேர்வு பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. ஆக்கி யூனிட் தலைவரும், முன்னாள் விளையாட்டு அலுவலருமான சேவியர் ஜோதிசற்குணம் தலைமை தாங்கி, போட்டியை தொடங்கி வைத்தார். செயலாளர் பீர்அலி, நடுவர்கள் ரவி, சதீஷ், முருகன் ஆகியோர் வீரர்களை தேர்வு செய்தனர். சப்-ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் ஆகிய 3 பிரிவுகளுக்கான வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மைதானத்தில் வீராங்கனைகள் தேர்வு நடக்கிறது. நெல்லை மாவட்ட ஆக்கி அணிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 36 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்