ஓட்டப்பிடாரத்தில்நீதிமன்றம், தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட இடம் தேர்வு: எம்.எல்.ஏ. ஆய்வு

ஓட்டப்பிடாரத்தில்நீதிமன்றம், தாலுகா அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை சண்முகையா எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

Update: 2022-11-10 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரத்தில் கடந்த மாதம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி ரா.குருமூர்த்தி வாடகை கட்டிடத்தில் திறந்து வைத்தார். பின்னர் நீதிமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு ஒட்டப்பிடாரம்-நெல்லை சாலையில் பட்டு பண்ணை அருகில் அரசு புறம்போக்கு இடத்தை மாவட்ட முதன்மை நீதிபதி , மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் தேர்வு செய்தனர். இந்த இடத்தில் சுமார் 20 ஏக்கர் நிலம் புறம்போக்கு இடம் இருப்பதால், நீதிமன்றத்துக்கு சொந்த கட்டிடம் கட்டுவதற்கும், அதே வளாகத்தில் தாலுகா அலுவலகம் கட்டுவதற்கும் இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தை எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ பார்வையிட்டார்.

அப்போது ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், தாசில்தார் நிஷாந்தினி, யூனியன் ஆணையாளர், கூடுதல் ஆணையாளர் பாண்டியராஜன், நில அளவை அலுவலர் ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்