மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைபட்டா வழங்க இடம் தேர்வு செய்யும் பணி-தாசில்தார் நேரில் ஆய்வு

மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைபட்டா வழங்க இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டார்.

Update: 2023-05-06 18:21 GMT

மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனைபட்டா வழங்க இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியை அடுத்த காட்டுப்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் 6 பேர் கடந்த மாதம் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டரிடம் வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி கோரிக்கை மனு அளித்தனர். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை நிறைவேற்றும்பொருட்டு நேற்று நெமிலி தாசில்தார் பாலசந்தர் இலவச வீட்டுமனை வழங்கவுள்ள இடத்தை தேர்வுசெய்யும் பணியில் ஈடுபட்டார்.

இது குறித்து நெமிலி தாசில்தார் பாலசந்தர் கூறுகையில், ''6 பேருக்கு வீட்டுமனை வழங்க தேவையான இடம் விரைவில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்'' கூறினார்.

அப்போது மண்டல துணை தாசில்தார் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் கனிமொழி, கிராம நிர்வாக அலுவலர் விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்