திருக்கோவிலூரில் அமைய இருக்கும்உழவர்சந்தைக்கு இடம் தேர்வு செய்யும் பணிகலெக்டர் ஷ்ரவன்குமார் நேரில் ஆய்வு

திருக்கோவிலூரில் அமைய இருக்கும் உழவர்சந்தைக்கு இடம் தேர்வு செய்யும் பணியை கலெக்டர் ஷ்ரவன்குமார் நேரில் ஆய்வு செய்தாா்.

Update: 2023-03-14 18:45 GMT


திருக்கோவிலூர், 

திருக்கோவிலூரில் உழவர் சந்தை அமைக்க தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து, இதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் திருக்கோவிலூருக்கு வருகை தந்தார். அப்போது, உழவர் சந்தை அமைப்பதற்காக ஆஸ்பத்திரி ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் அருகே தேர்வு செய்யப்பட்டு இருந்த அரசுக்கு சொந்தமான காலி இடத்தை நேரில் பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் உழவர் சந்தைஅமைய உள்ள பகுதியில் போக்குவரத்து வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். ஆய்வின் போது திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் யோகஜோதி, தாசில்தார் கண்ணன், நகராட்சி ஆணையாளர் கீதா மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, உழவர்சந்தைக்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. ஆஸ்பத்திரி ரோட்டில் உள்ள இடமும் இன்னும் முடிவு செய்யப்படவில்லை. அங்குள்ள வசதிகள் உள்ளிட்ட அனைத்தும் ஆராய்ந்த பின்னரே இடம் இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்