நீலகிரியில் துளிர் திறனறிதல் தேர்வு
நீலகிரி மாவட்டத்தில் துளிர் திறனறிதல் தேர்வை 1,240 மாணவர்கள் எழுதினர்.
கூடலூர்
நீலகிரி மாவட்டத்தில் துளிர் திறனறிதல் தேர்வை 1,240 மாணவர்கள் எழுதினர்.
திறனறிதல் தேர்வு
தேசிய அறிவியல் தினம் வருகிற 28-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்ட தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 4 பிரிவுகளில் துளிர் திறனறிதல் தேர்வு நடைபெற்றது. இதில் பந்தலூர், கூடலூர், கோத்தகிரி, குன்னூர், ஊட்டி ஆகிய தாலுகாக்களில் உள்ள அரசு, தனியார் உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுதினர். மாணவர்கள் போட்டித்தேர்வுக்கு பள்ளி படிப்பிலேயே தயாராகும் விதத்தில் இத்தேர்வு நடைபெற்றது.
கூடலூர் பகுதியில் 34 பள்ளிகளிலும், குன்னூரில் 2 பள்ளிகளிலும் கோத்தகிரியில் 3 பள்ளிகளிலும் என மொத்தம் 1,240 மாணவர்கள் தேர்வு எழுதினர். கல்லூரி பேராசிரியர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தேர்வு மைய கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
சான்றிதழ்கள்
இத்தேர்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் விஞ்ஞான துளிர் புத்தகங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மாவட்ட திறனாய்வு தேர்வு ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் சனல்குமார், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் மணிவாசகம், மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட தலைவர் ராஜூ மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கவிதா, செந்தில்குமாரி, கிருஷ்ணகுமார் ஆகியோர் கண்காணித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகிகள் கூறும்போது, ஒவ்வொரு ஆண்டும் தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடும் வகையில் மாணவர்களுக்கு திறனறிதல் தேர்வு நடத்தப்படுகிறது. இது மாணவர்கள் தங்களது அறிவியல் திறனை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்பாக உள்ளது என்றனர்.