அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்ட செயல்பாட்டிற்கு கள்ளிக்குடி வட்டாரத்தில் 7 கிராம ஊராட்சிகள் தேர்வு

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்ட செயல்பாட்டிற்காக கள்ளிக்குடி வட்டாரத்தில் இருந்து 7 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

Update: 2023-06-15 20:38 GMT


கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்ட செயல்பாட்டிற்காக கள்ளிக்குடி வட்டாரத்தில் இருந்து 7 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

வேளாண் திட்ட செயல்பாடு

கள்ளிக்குடி வட்டார உதவி தோட்டக்கலை இயக்குநர் பிரிஸ்கா பிளேவியா கூறியிருப்பதாவது, நடப்பு 2023-24-ம் ஆண்டிற்கான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் திட்ட செயல்பாட்டிற்காக கள்ளிக்குடி வட்டாரத்தில் 7 பஞ்சாயத்து கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் கள்ளிக்குடி பிர்காவிற்கு உட்பட்ட தென்னமநல்லூர், எம்.புளியங்குளம் மற்றும் குராயூர் பிர்காவிற்கு உட்பட்ட எஸ்.வெள்ளாகுளம், மருதங்குடி, டி.கொக்குளம், சென்னம்பட்டி, பேய்குளம் ஆகிய கிராம ஊராட்சிகள் ேதர்வு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு தேர்வுசெய்யப்பட்ட கிராமங்களுக்கு அனைத்து துறை சார்ந்த திட்டங்களிலும் 80 சதவீதம் சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படும்.

பயன்பெறலாம்

மேலும் தோட்டக்கலை துறை மூலம் சிறப்பு திட்டமாக கிராம ஊராட்சிகள் ஒன்றிற்கு 300 பழ மர தொகுப்புகளும், தோட்டக்கலை பயிர் சாகுபடியை உயர்த்தும் நோக்கில் மானிய உதவிகளும் அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கணினி சிட்டா மற்றும் இதர ஆவணங்களுடன் கள்ளிக்குடி தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்