ஒன்றிய அளவிலான கலை போட்டிக்கு தேர்வு
ஒன்றிய அளவிலான கலை போட்டிக்கு தேர்வு
கோட்டூர்
கோட்டூர் அருகே உள்ள ரமணமுதலிபுதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் நட்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இணைவோம், மகிழ்வோம் என்கிற கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா தலைமை தாங்கினார். விழாவில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் குறித்த பதாகைகளை கையில் ஏந்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து பள்ளி அளவில் கலைத்திருவிழா நடத்தப்பட்டது. இதில் மெழுகு சோப்பு, களிமண் போன்றவற்றை பயன்படுத்தி விநாயகர், சிவலிங்கம் ஆகிய சிலைகளும், காகிதங்களை பயன்படுத்தி பூமாலை, பட்டம், கப்பல் போன்றவற்றையும் மாணவ-மாணவிகள் தயாரித்தனர். இதில் வெற்றி பெற்றவர்கள் ஒன்றிய அளவிலான கலை போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டனர்.